தற்போது பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு நீர்மட்டம் ஏற்கனவே குறைந்துள்ளதுடன், மழைக்காடுகளில் வளைந்து செல்லும் பல ஆறுகளில் இறந்த மீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் 500,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.