நீர்கொழும்பு, மாங்குளி குளம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான களனி கப்பல் இன்று மாங்குளி குளம் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி படகு ஒன்றை கடற்படையினர் பரிசோதித்த போது, 400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கையிருப்பின் மொத்த பெறுமதி 132 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.