ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத காரணத்தினால் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இப்பிரச்சினையால் அப்பிரதேச மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், சத்திரசிகிச்சைக்காக காலி மாத்தறை வைத்தியசாலைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் முறையாக அறிவிக்காமல் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இதன் காரணமாக வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.