செய்திகள்உள்நாட்டு50 அதி சொகுசு பேருந்துகள் மீண்டும் சேவைக்கு

50 அதி சொகுசு பேருந்துகள் மீண்டும் சேவைக்கு

இடைநிறுத்தப்பட்டுள்ள 50 அதி சொகுசு பேருந்துகள் எஞ்சிய ஆறு மாதங்களில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கட்டுபெத்த அதி சொகுசு பயண போக்குவரத்து சேவை நிறுவகத்தின் பஸ் முற்றத்தில் இடம்பெற்ற விசேட அவதானிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் நிகர இலாபம் ஈட்டக்கூடிய 50 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சோதனைகளின் பின்னர் இந்த 50 பேருந்துகளை மீள செயற்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles