பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனொன்றில் இருந்து ஒரு கோடியே அறுபத்து நான்கு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப் பொருள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ, சிலாபம் பகுதியில் உள்ள முகவரிக்கு இந்த பார்சல் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு கிலோ 98 கிராம் எடையுடைய ஹஷிஷ் இருந்ததாகவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணைகளில் குறித்த முகவரி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த போதைப்பொருள் கையிருப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
ஹஷிஷ் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.