Tuesday, November 19, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜோர்தான் செல்லும் பணிப் பெண்களுக்கு புதிய காப்பீடு

ஜோர்தான் செல்லும் பணிப் பெண்களுக்கு புதிய காப்பீடு

ஜோர்தானில் வீட்டு பணிப் பெண்களாக தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக புதிய காப்புறுதிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பெண் தொழிலாளரை சம்பந்தப்பட்ட வேலைக்கு அமர்த்தும் நபர் இந்த காப்பீட்டை பெற்றிருக்க வேண்டும், மேலும் வெளிநாட்டு வேலைக்காக பணியகத்தில் பதிவு பெறுவதற்கு இந்த காப்பீட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

ஜோர்தானில் வீட்டுப் பணியாளர்களாக தொழில் ஈடுபடும் பெண்கள் இந்தக் காப்பீட்டைப் பெறுவது கட்டாயமாகும், அதற்காக ஜோர்தான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று காப்பீட்டுத் திட்டங்களில் தகுந்த காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது வேலை ஒப்பந்த காலத்தில் பணியாளரின் மரணம் அல்லது நிரந்தர முழு அங்கவீனம் ஏற்பட்டால் காப்பீட்டு இழப்பீடு வழங்குகிறது.

இது தவிர, மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் கொவிட் போன்ற தொற்றுநோய்களுக்கு இழப்பீடும் கிடைக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles