Sunday, August 3, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

அஸ்வெசும’ கொடுப்பனவு தொடர்பான பணிகளை வலுக்கட்டாயமாக மேற்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெகத் சந்திரலால் இதனைக் கூறியுள்ளார்.

‘அஸ்வெசும’ தொடர்பான பணிகளினால் கிராம உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அஸ்வெசும’ கொடுப்பனவு திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டம் எனவும், அதன் பணிகளை நிறைவேற்றுவதற்காகவே சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பணிகளை கிராம உத்தியோகத்தர்கள் மீது திணிக்க முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles