Wednesday, November 20, 2024
25.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம்

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம்

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு WhatsApp இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

076 54 53 454 எனும் WhatsApp இலக்கத்துக்கு தகவல்கள், முறைப்பாடுகள், காணொளிகள் அல்லது படங்களை அனுப்ப முடியும் என அவர் கூறினார்.

மேலும், 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்துக்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles