Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகருங்குரங்கு குட்டிகளை திருடியவர்களை தேடி வலைவீச்சு

கருங்குரங்கு குட்டிகளை திருடியவர்களை தேடி வலைவீச்சு

பெல்லன்வில, அத்திட்டிய வன ஜீவராசிகள் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த 4 கருங்குரங்கு குட்டிகளை சிலர் திருடிச் சென்றமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்கிசை தெலைமையக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

அந்த பராமரிப்பு நிலையத்தில் வனவிலங்கு உதவியலாளர் மாதவ மிஹிர கும்புககேவினால் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை 03.30 மணியளவில் இந்த திருட்டுச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்துள்ளனா்.

குரங்குக் குட்டிகளை திருடவதற்காக வந்த இருவர் குரங்குகளை வைத்திருந்த கூட்டுக்கள் சென்றமை அங்கு பொருட்டிருந்த சி.சி.ரி.வி. கெமராக்கிலில் பதிவாகியுள்ளதுடன், அவர்கள் காரொன்றில் வந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.

சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல் கிடைத்தால் வனஜீவராசிகள் அவசர அழைப்பு இலக்கம் 1992 அல்லது பராமரிப்பு நிலையத்தின் அழைப்பு இலக்கமான 0113604147 ஆகியவற்றுக்கு அறிவிக்குமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles