Saturday, October 11, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

இரு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07) நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலங்கள் நேற்றும் (07) நேற்றுமுன்தினமும் (06) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 15ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமாகவும் இச்சட்டங்கள் இன்று முதல் (08) நடைமுறைக்கு வருகின்றன.

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் நேற்று 45 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles