Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெல்லவாய பகுதியில் ஒருவர் கொலை

வெல்லவாய பகுதியில் ஒருவர் கொலை

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை ​செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்த நிலையில், வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் எனவும் அயல் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles