Wednesday, November 20, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

களு, ஜின், நில்வலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த கங்கைகளின் தாழ்வான பகுதிகளில் நீர் மட்டம் இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (04) எந்தப் பிரதேசத்திலும் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை. எனினும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜின் மற்றும் நில்வலா கங்கையின் தாழ்வான பகுதிகளிலும், களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் கீழ்ப்பகுதிகளிலும், புலத்சிங்கள பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆறுகளின் கீழ்ப்பகுதிகளிலும் நீர் மட்டம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

எனினும், அப்பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை என நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் எஸ். பி. சி. திரு.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

இந்த ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதால் எதிர்வரும் காலங்களில் அதிக மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் திரு.சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக தென்மேற்கு பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles