இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பி செலுத்தியுள்ளது.
இலங்கை இந்த தொகையினை நேற்று (31) திருப்பி செலுத்தியதாக பங்களாதேஷ் வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்ததாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய தவணையுடன், இலங்கை மொத்தம் 150 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பிச் செலுத்தியிருந்தது.
2021 ஆகஸ்ட் மாதம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாணய பரிமாற்ற ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.