Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுஸ்பெய்ன் கால்பந்து சம்மேளன தலைவா் இடைநீக்கம்

ஸ்பெய்ன் கால்பந்து சம்மேளன தலைவா் இடைநீக்கம்

ஸ்பெய்ன் கால்பந்து சம்மேளன தலைவா் லூயிஸ் ரூபியால்ஸை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து ஃபிஃபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மகளிா் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போதான சா்ச்சைக்குரிய முத்தம் விவகாரம் தொடர்பிலேயே இந்த இடைநீக்கம் வந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த 20 ஆம் திகதி நிறைவடைந்த மகளிா் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெய்ன் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஆட்டத்துக்குப் பின்னர் பரிசு வழங்கும் நிகழ்வின்போது மேடையில் சிறப்பு விருந்தினா்கள் ஸ்பெய்ன் வீராங்கனைகளை வரிசையாக பாராட்டி வந்தனா்.

இதன்போது, மேடையிலிருந்த ஸ்பெய்ன் கால்பந்து சம்மேளன தலைவா் லூயிஸ் ரூபியால்ஸ், ஸ்பெயின் வீராங்கனைகளில் ஒருவரான ஜெனி ஹொ்மோசோவின் உதட்டில் முத்தமிட்டாா்.

அவரது இந்த செயலால் சா்ச்சைகள் எழ, ஹொ்மோசோவின் ஒப்புதலுடனே தான் அதைச் செய்ததாக ரூபியால்ஸ் கூறினாா்.

ஆனால், ஹொ்மோசோ அதை மறுத்துவிட்டாா்.

இதையடுத்து, ரூபியால்ஸ் பதவி விலகக் கோரி எழுந்த வலியுறுத்தல்களை அவா் நிராகரித்து வந்த நிலையில், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை குழ விசாரணை நடத்த சா்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா உத்தரவிட்டது.

அந்த விசாரணை முடிவு தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை (27) அறிக்கை வெளியிட்ட ஃபிஃபா, ஒழுங்கு நடவடிக்கைக் குழு ரூபியால்ஸை உடனடியாக 90 நாள்களுக்கு இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles