Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்​வெசும கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல்

அஸ்​வெசும கொடுப்பனவுகள் அடுத்த வாரம் முதல்

விசேட தேவையுடையவர்கள், முதியோர் உதவித்தொகை, சிறுநீரக நோய் மானியம், சமுர்த்தி, மற்றும் அஸ்​வெசும உள்ளிட்ட பயனாளிகளுக்கு முதற்கட்டத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அஸ்​வெசும கொடுப்பனவுகளுக்காக 5.4 பில்லியன் ரூபாவும், விசேட தேவையுடையவர்கள், முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் 1.8 பில்லியன் ரூபாவும், சமுர்த்தி கொடுப்பனவு கிடைத்து அஸ்​வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாமல் மேன்முறையீடு செய்துள்ளவர்களுக்கு 1.2 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles