இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ள போதும், வர்த்தக வங்கிகள் அதற்கமைய வட்டி வீதங்களை குறைக்காதுள்ளன.
இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் தங்களது வட்டி வீதங்களை குறைப்பதற்கான கட்டாய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி நகை அடைவு வைப்பதற்கான வட்டி, கடனட்டைகள், முன்திட்டமிட்ட மேலதிக எடுப்பனவு (ஓவர் ட்ராஃப்ட்), புதிய மற்றும் ஏற்கனவே இருக்கின்ற ரூபாய் அடிப்படையிலான கடன்கள் போன்றவற்றின் வட்டிவீதங்கள் குறைக்கப்பட வேண்டும்.
இம்மாதம் 25ஆம் திகதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.