கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த ஏவுகணை உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும், இது ரஷ்ய ஆயுதப் படைகளின் போர் திறனை வலுப்படுத்தும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையும் புதிய ஏவுகணை உறுதி செய்துள்ளது என்றும், ரஷ்யாவை தாக்க நினைக்கும் எதிரிகள் இது குறித்துசிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.