ஹைட்டியில் போர் ஓ ப்ரின்ஸ் நகரில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
ஜெக்மேல் நகரை நோக்கி பயணித்த போதே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.