Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஷாஃப்டர் மரணிக்கும் போது அணிந்திருந்த ஆடைகள் தொடர்பான நீதிமன்ற உத்தரவு

ஷாஃப்டர் மரணிக்கும் போது அணிந்திருந்த ஆடைகள் தொடர்பான நீதிமன்ற உத்தரவு

அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில், குறித்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டது.
இதன்போது, அங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், வர்த்தகர் இறந்த இடத்திலும், அவரது வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை விசாரணைக்காக ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles