Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண்டி பெரஹெராவில் அட்டகாசம் செய்த யானைகள்

கண்டி பெரஹெராவில் அட்டகாசம் செய்த யானைகள்

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் இரண்டாம் நாள் கும்பல் பெரஹெரவின் போது இரண்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன் காரணமாக பெரஹெர நிகழ்வில் பதற்றமான நிலை உருவானது.

யானைகளின் அட்டகாசம் காரணமாக பீதியடைந்த மூவர் கண்டி ஏரியில் குதித்துள்ளனர்.

எனினும் அவர்கள் பின்னர் ​​காவல்துறையின் உயிர்காப்புக் குழுவினர் மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணொருவர் கண்டி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles