வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஒரு கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட்டார்.
கிழக்குக் கரையோரத்தில் நிலைகொண்டிருந்த கடற்படையின் போர்க்கப்பலையும் அவர் பார்வையிட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவும் அமெரிக்காவும் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்திய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து தென்கொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டு, முன்னைய பயிற்சிகளை விட பெரிய அளவில் அமெரிக்காவுடன் இணைந்து எதிர்கால இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.