செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு

காணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு

பல நாட்களாக காணாமல் போயிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்று (20) அம்பேகம குருசிங்ககொட பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த இராணுவ சிப்பாய் விடுமுறை பெற்று 05 ஆம் திகதி வீடு திரும்பியதுடன் 14 ஆம் திகதி மீண்டும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டியிருந்தது.

எனினும், அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறிய அவர், தனது கைத்தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டை விட்டுச் சென்ற இராணுவச் சிப்பாய் அன்றைய தினம் வீடு திரும்பவில்லை இதனால் அவரது மனைவி மறுநாள் (15) பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து, காணாமல் போன இராணுவ வீரரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணாமல் போய் 06 நாட்களின் பின்னர் அவரது சடலம் நேற்று (20) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles