வறட்சியான காலநிலையினால் இறைச்சி உண்ணும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதால் விஷம் கலந்து விலங்குகளை வேட்டையாட சிலர் தூண்டப்படுகின்றனர்.
இதன் காரணமாக மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், அநுராதபுரம், மட்டக்களப்பு, பொலன்னறுவை போன்ற பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இறைச்சியை வாங்கும் போது அல்லது உண்ணும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.