செய்திகள்உள்நாட்டுஜப்னா கிங்ஸின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி

ஜப்னா கிங்ஸின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி

2023 லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான நொக்கவுட் போட்டியில் பிலவ் கண்டி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

கண்டி அணியின் இந்த வெற்றியின் மூலம் நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

பிலவ் கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க இந்த ஆட்டத்தில் வெறும் ஒன்பது ஓட்டத்துக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது போட்டியின் சிறப்பம்சமாகும்.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிலவ் கண்டி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் அதிகபடியாக ஆரம்ப வீரராக களமிறங்கிய மொஹமட் ஹாரிஸ் 79 (49) ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 41 (24) ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணியால், 17.2 ஓவர்களை மாத்திரம் இழந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இதனால் பிலவ் கண்டி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles