Saturday, June 14, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹோமாகம இரசாயன களஞ்சியசாலையில் தீப்பரவல்

ஹோமாகம இரசாயன களஞ்சியசாலையில் தீப்பரவல்

ஹோமாகம கைத்தாழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் நேற்று (17) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும், ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோமாகம-பனாகொட இராணுவ முகாமின் படையினரும் இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளனர்.

தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது,

நேற்று (17) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்தினால், தொழிற்சாலையின் இரண்டு கட்டிடங்களும் முற்றாக சேதமடைந்துள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, அதனை அண்டிய பகுதிகளில் வளி மாசடந்துள்ளமையால், முகக் கசவங்களை அணியுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles