பண்டாரவளை, கஹட்டவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது ப்ரென்ஞ் ப்ரைஸ் உற்பத்தி தொழிற்சாலை நாளை (11) திறந்து வைக்கப்படவுள்ளது.
ப்ரென்ஞ் ப்ரைஸ் இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் செலவிடப்படும் 3500 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்கும் நோக்கில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேளாண் தொழில் முனைவோர் திட்டம் (SAPP) இதற்கான வசதிகளை செய்துள்ளது.
இத்தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய சுமார் இரண்டு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், ப்ரென்ஞ் ப்ரைஸ்களை உற்பத்தி செய்யும் நாட்டின் முதலாவது தொழிற்சாலை இதுவாகும்.
இத்தொழிற்சாலையின் ப்ரென்ஞ் ப்ரைஸ்கள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்பட உள்ளன.