அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர், அமெரிக்க புலனாய்வு பிரிவான எப்.பி.ஐயினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேநபர், தமது சமூக வலைத்தளங்களின் ஊடாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்தும் பதிவேற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவர் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க புலனாய்வு பிரிவு ஆரம்பித்திருந்தநிலையில், உட்டா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அமெரிக்க புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.