Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு19 வயது காதலியின் 54 வயது காதலன் மீது தாக்குதல்

19 வயது காதலியின் 54 வயது காதலன் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நேற்று 54 வயதுடைய நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் அப்பகுதியில் உள்ள 19 வயதுடைய இளம்பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன்னர் காதலியை வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் காதலியுடன் சுன்னாகம் திரும்பிய போது யுவதியின் உறவினர்களால் அவரும் யுவதியுமு; தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர்களால் தாக்கப்பட்டதில் 19 வயதுடைய யுவதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (08) தெல்லிப்பளை வைத்தியசாலை பிரேத அறையில் நடைபெறவுள்ளது.

உயிரிழந்த நபர் திருமணமானவர் எனவும், 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles