Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெக்கிராவ பிரதேச செயலகத்தில் வெடிப்பு

கெக்கிராவ பிரதேச செயலகத்தில் வெடிப்பு

கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலகூடம் ஒன்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளரும் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும், வெடிவிபத்தில் பிரதேச செயலாளருக்கோ அல்லது ஊழியர்களுக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிவிபத்தில் கழிவறையின் பாகங்கள், ஜன்னல்கள் உட்பட பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles