Thursday, April 16, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து சாரதிகள் தவறிழைத்தால் அறிவிக்க விசேட செயலி

பேருந்து சாரதிகள் தவறிழைத்தால் அறிவிக்க விசேட செயலி

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சாரதிகள் இழைக்கும் தவறுகளை குறித்த செயலி ஊடாக பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில், சாரதிகளுக்கு குறைபாடு பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை பரிசோதகர்களால் அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles