Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்

நாடாளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இவ்வாறு நாடாளுமன்றத்தை மூடினால் அதன் பராமரிப்புக்கு செல்லும் தொகை மிச்சமாகும் எனவும், ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுப்பார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும் எனவும் அதன் பின்னர் இலங்கை படிப்படியாக கடன் வாங்கும் நாடாக இல்லாமல் உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles