சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பானது இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்த வாய்ப்புகளுக்காக ஆசியாவுடன் தொடர்பை வெளிப்படுத்தியதோடு, எதிர்கால அபிவிருத்தி திட்டங்கயைும் முன்வைத்தார்.
மேலும், நாட்டின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராட்டத்தக்க முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க சீன தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிவடைந்தவுடன், நிறுத்தப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் உடனடியாக மீண்டும் தொடங்கப்படும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.