Monday, July 28, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண்டியில் சில பகுதிகளுக்கு 6 மணித்தியால நீர்வெட்டு

கண்டியில் சில பகுதிகளுக்கு 6 மணித்தியால நீர்வெட்டு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொல்கொல்ல நீர் வழங்கல் திட்டத்தின் நயாவல பாலத்திற்கு அருகில் அத்தியவசிய விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பி.ப. 3 மணி வரையிலான 6 மணித்தியால நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

உடதலவின்ன, பல்லெதலவின்ன, சரசவி மாவத்தை, பொல்கொல்ல, நவயாலதென்ன மற்றும் ஜம்புகஹபிட்டிய ஆகிய பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles