Wednesday, December 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறு தந்தை தாக்குவதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் பொலிஸ் காவலில்

சிறு தந்தை தாக்குவதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் பொலிஸ் காவலில்

சிறு தந்தையின் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு ஓடிய 9 வயது சிறுவனை தமது காவலில் வைத்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாராவில்லுவ பிரதேசத்தில் இனந்தெரியாத ஆண் குழந்தையொன்று நடமாடுவதாக பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தான் புத்தளம் – தப்போவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், தனது தாயின் இரண்டாவது கணவர் தன்னை அடிக்கடி தாக்குவதால் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இந்த வாக்குமூலத்துடன், முந்தலம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles