Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி - இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி – இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடிள்ளார்.

இந்த சந்திப்பானது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று காலை வெளிவிவகார அமைச்சில் இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தனவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார செயலாளர் குவத்ராவுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை அதன் மக்களின் பரஸ்பர நன்மைகளுக்காக வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles