Wednesday, July 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆண்களிடையே வேகமாக பரவும் எயிட்ஸ்

ஆண்களிடையே வேகமாக பரவும் எயிட்ஸ்

நாட்டில் ஆண்களிடையே எயிட்ஸ் நோய் மிக வேகமாகப் பரவிவருவதாகவும் அண்மைக்கால புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் மத்தியில் எச்.ஐ.வி. பாதிப்பு ஏழு மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய், எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர், வைத்தியர் ஜானகி விதாரனபத்திரண இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 25 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு 607 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங்காணப் பட்டுள்ளனர். அவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளங்காணப்படும் வீதம் 44 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களுக்கிடையேயான ஓரினச் சேர்க்கையும் எயிட்ஸ் நோய் பரவலுக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles