Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரிக்கை

உள்ளூர் முட்டைகளுக்கான நுகர்வோரின் தேவை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

இறைச்சி, மீன் மற்றும் உலர் பழங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதனால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அந்த விலையை நுகர்வோர் தாங்க முடியாமல் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரே நாளில் நான்கு முதல் ஐந்து இலட்சம் வரை முட்டை தேவை அதிகரித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

முட்டையின் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles