கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எட்டு விடுதிகளில் உள்ள சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஒரு பெண் வைத்தியர் உட்பட மூன்று வைத்தியர்கள் பத்து நாட்களாக கடமையை புறக்கணித்ததன் காரணமாக இந் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடுதிகளுக்கு சிறுவர்களை சேர்ப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று வைத்தியர்கள் இல்லாதமை தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்திய போதிலும் அம் மூன்று வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் தற்போது அந்த விடுதியல் உள்ள சிறுவர்களுக்கான சிகிச்சைகள் பயிற்சி மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும், இது சிறார்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
