Thursday, June 25, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பான் கடலுணவுகளுக்கு தடை விதித்தது சீனா

ஜப்பான் கடலுணவுகளுக்கு தடை விதித்தது சீனா

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுக் கழிவு நீரை கடலில் விடுவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜப்பானின் பிற பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற உணவுப் பொருட்களும் கடுமையான கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அந்நாட்டு சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு சுனாமியால் அழிந்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் 1.33 மில்லியன் கனமீட்டர் கழிவுநீரை உலக தரத்தின்படி அப்புறப்படுத்த சர்வதேச அணுசக்தி முகமை சமீபத்தில் ஜப்பானுக்கு அனுமதி வழங்கியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles