Thursday, June 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்

தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்

நெடுந்தீவு அருகே கடந்த ஜூன் 19ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 கடற்றொழிலாளர்கள், நேற்று (06) நாடு திரும்பினர்.

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவர்கள், நேற்று காலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் தரை மார்க்கமாக ராமேஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படகு பழுதடைந்த நிலையில், இலங்கைக் கடற்படையினர் தமது, படகை சரிசெய்து தம்மை திருப்பி அனுப்ப முயற்சித்த போதிலும், படகில் ஒரு துளை ஏற்பட்டு, அதன் மூலம் படகுக்குள் தண்ணீர் புகுந்ததால், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்தே அவர்கள் தம்மை இலங்கைக்கு அழைத்துச் சென்றதாக மீளத்திரும்பிய தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles