இந்த வருடத்தில் இதுவரை 50 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் வைத்திய நிபுணர்களின் பயிற்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளுக்குச் சென்ற 30 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மையில் கோப் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.