வாழைச்சேனை – கஹவத்தமுனை – ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற 54 வயதான ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மீன்பிடிக்கச் சென்ற தமது கணவர் காணாமல் போயுள்ளதாக குறித்த நபரின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி, முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், இறால் பண்ணையொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.