சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகக்குழு ஒன்றுடனான உரையாடல் ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர்களை வழங்கி, இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்தது.
இந்தியா அந்த ஆதரவை வழங்கவில்லை என்றால், இலங்கை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு சென்றிருக்கும் என்றும் மொரகொட தெரிவித்துள்ளார்.
இதில் எந்த கேள்வியும் இல்லை. சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு இந்தியாவினால் மட்டுமே சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.