கனடாவில் கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களுடன், மூன்று கணினி, மூன்று மடிக்கணினிகள், நான்கு பிரிண்டர்கள், ஒரு ஸ்கேனிங் இயந்திரம், போலி வைப்புச் சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், பல்வேறு பாஸ் புத்தகங்கள், தூதரகங்களுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட ஆவனங்கள் மற்றும் பல்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
கடத்த பிரதேசத்தில் கட்டிடமொன்றில் இயங்கி வந்த இந்த நிலையத்தில் பண மோசடி தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் கோட்டை நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை, ராகம, களனி பிரதேசங்களை வசிப்பிடமாகவும், 23 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில், கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.