Sunday, February 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாழடைந்த வீடொன்றிலிருந்து சிறுமி உட்பட இருவர் சடலங்களாக மீட்பு

பாழடைந்த வீடொன்றிலிருந்து சிறுமி உட்பட இருவர் சடலங்களாக மீட்பு

சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (26) இரவு ரத்தொலுவ சாமா மாவத்தையில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அருகில் ஒரு சிறுமியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவஇ கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளார்.

யிரிழந்த சிறுமி கச்சக்காடு பகுதியைச் சேர்ந்த 4 வயதுடையவர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், சிறுமியின் தந்தையின் சகோதரர் எனவும், சிறுமியின் தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் அவர் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. ஷ

இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles