Tuesday, November 19, 2024
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிரிபோஷா நெருக்கடி காரணமாக குழந்தைகளின் போசணை குறைப்பாடு அதிகரிப்பு

திரிபோஷா நெருக்கடி காரணமாக குழந்தைகளின் போசணை குறைப்பாடு அதிகரிப்பு

திரிபோஷா நெருக்கடி காரணமாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை மேலும் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளின் போஷாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் திரிபோஷா வழங்கப்படாததால் போசாக்கு குறைப்பாடு அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கூறுகிறார்.

பொதுவாக, இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போசாக்கின்மை வீதம் 50% ஆகவும், அம்பாந்தோட்டை, நுவரெலியா, காலி, மாத்தறை, மொனராகலை, களுத்துறை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 50% ஐத் தாண்டியுள்ளதாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles