16 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொள்கலன் ஒன்றிலிருந்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனின் குளிர்சாதனப் பெட்டியில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுங்க கட்டுப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த உருளைக் கிழங்கு தொகுதி இறக்குமதி தொடர்பான நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தலில் ஈடுபட்ட ஏனைய நபர்களை கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.