Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உலகம்பாரிஸ் வெடிவிபத்தில் 37 பேர் காயம்

பாரிஸ் வெடிவிபத்தில் 37 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என்று அதிரடிப்படையினர் தேட ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles