கதிர்காமம் எசல பெரஹரா திருவிழாவின் மூன்றாவது நாள் இன்றாகும்.
கதிர்காமம் எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பக்தர்களின் வாகனங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள எசல திருவிழாவிற்கு கதிர்காமம், திஸ்ஸமஹாராம, கிரிந்த, தங்காலை ஆகிய பிரதேசங்களுக்கு பெருமளவான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.