சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் நாமல் ராஜபக்ச 70 மில்லியன் ரூபா ஊழல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நடந்து 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வெளிநாட்டு பயண தடையை நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.